உன்னை ஏன் கண்டேனோ.

உன்னை ஏன் கண்டேனோ.
என்னை ஏன் தந்தேனோ.
உன்னை நான் நேசித்தேன்.
உன் மூச்சை சுவாசித்தேன்.
உன் விழியில் உள்ள காந்தம்
என்னை திரும்பி பார்க்க தூண்டும்.
இதழ் மொழியில் உள்ள இன்பம்
அதை காணாதிருந்தால் துன்பம்.
என் அன்பே நீ தானே.
என் நெஞ்சில் தீ தானே.
அன்பே உன்னை கண்டதும்
இதழ்கள் ஆதோ சொல்ல நினைக்கிறதே.
இத்யம் கூட எனை அறியாமல்
சிறகுகள் முளைத்து பறக்கிறதே.
உன் நினைவில் சிக்கி தவித்தேன்.
என் கனவில் வந்தாய் சிலிர்த்தேன்.
என் இரவை வெள்ளை அடித்தேன்.
என் விழிக்கு தண்டனை கொடுத்தென்.
என் ஜீவன் நீ தானே..
நீ நீ மௌனத் தீ தானே.
என் இதயம் சினுங்கும் காதலை
அன்பே எப்படி சொல்வேனோ.
என் விழிகள் பார்த்து கொஞ்சம்
இதயம் நீயே அறிவாயோ.
இதயம் சொல்ல சொல்லி கொஞ்ச.
இதழ்கள் பொய்யாய் உன்னை கெஞ்ச.
மன உலறல் மெல்ல மிஞ்ச.
அதில் என் காதல் மட்டும் எஞ்ச.
என் காதல் நீ தானே.
என் நெஞ்சில் நீ தானே.