தலை முழுகல்

கார்மேகம் சூழ்ந்தது வானில்
அந்தி வேளையில் இருட்டும்
ஆக்கிரமிப்பு செய்தது ...!

இரை தேடிச் சென்ற
பறவைகளும் தத்தம்
கூட்டுக்கு விரைந்தன ...!

வளி வளைத்து வீசியது
வெட்டியது மின்னல் இடி முழங்க
கொட்டியது கனமழை ....!

புழுங்கிய மனதுடன் அவள்
மரத்துப் போன இதயமுடன்
கொதிப்படங்க நனைகிறாள் ...!

அவள் விழிகள் வடிக்கும்
சூடான கண்ணீர்
மழை நீரில் கலந்தது .....!

ஆசைகளை ஆழ விதைத்துவிட்டு
கைக்கழுவிச் சென்றவனை
தலைமுழுக வான்நீரில் குளிக்கிறாளோ ....???

எழுதியவர் : ராஜ லட்சுமி (28-Jul-14, 11:38 pm)
பார்வை : 363

மேலே