மொழிபெயர்ப்பு மீண்டும் வானம்பாடி

( பரிசு பெற்ற வானம்பாடிக் கவிதை- தோழர் ஷ்யாமளாவின் கவிதை மொழிபெயர்ப்பு . போட்டிக்கு வேறு கவிதை ஒன்று மொழிபெயர்ப்பு செய்து சேர்த்துள்ளேன் . போட்டிக்கான காலம் முடித்து விட்டதால் இது படித்துச் சுவைக்க ) மூலக் கவிதை கீழே .
VOICE OF VANAMBADI

Raising their voice for the suffering mass,
Resisting the attacks of the repressive class,
Presenting the Truth without any mask ,
That is the Band of VANAMBADI Larks!!

They have flocked together, breaking all locks
Freeing their lyrics from the grammatical blocks.
Their poetic seed will blossom into a big tree
Piercing the path, in a burning spree .

They rang for the rights with resolute shouts,
Renewed vision, the mind will scout .
Revolutionary thoughts rumbling across,
Redefining the course of their Poetic cause!

To eradicate the curse of repressive violence ,
To entrap the scourge of endemic corruption ,
To eliminate the terror of fanatical gains ,
We yearn for the return , YOU , VANAMBADI AGAIN !!


மீண்டும் வானம்பாடி –shyamala rajasekar
அடித்தட்டு மக்களுக்காய் அறைகூவல் விடுக்கும்
அதிகார வர்க்கத்தின் நசுக்குதல் எதிர்க்கும்
அரிதாரம் போடாமல் உண்மையை உடைக்கும்
அதுவே கவிபாடும் வானம்பாடி இயக்கம் !

கூடுகள் திறந்து கூடிய கூட்டம்
அடங்காது யாப்பில் அவர்தம் முழக்கம்
கவிதை வித்து விருட்சமாய் வளரும்
கனலாய் சிவந்து சீறிப் பாயும் !

உரக்கச் சொல்லி உரிமை கேட்கும்
உரத்த சிந்தனை உள்ளம் மீட்கும்
புரட்சிப் போக்கால் புரட்டிப் போடும்
புதுமை தொனியில் பாடுபொருள் விரியும் !

தூண்டும் வன்முறை பூண்டோடு தொலைய
தோண்டும் குழியில் ஊழல்கள் புதைய
சீண்டும் மதவாதம் அடியோடு அழிய
வேண்டும் வேண்டும் மீண்டும் வானம்பாடி !!

எழுதியவர் : நாதமாரா (28-Jul-14, 11:42 pm)
பார்வை : 197

புதிய படைப்புகள்

மேலே