இராமன் அல்ல நான்
இராமன் அல்ல நான்
பாவைகளைப் பார்க்காமல் இருக்க !
பார்க்கிறேன் பலரை பயனில்லை
யாவரும் நீயானாய் !
பிரம்மனும் அல்ல நான்
எனக்காக உன்னை படைத்துப் பார்க்க !
மனம், பார் என்றாலும் பாராதே என்றாலும்
பாதி நீயே நின்றாய் !
சிவன்னாய் நிற்கும் என்னில்
உன்னை அழிக்க எவனால் முடியும் !

