யார் இவள்

மௌனமாய் வந்து
என் மௌனத்தைக் கலைத்து
சென்றவள்........
வண்ணங்கள் வாங்கவந்து
அவள் எண்ணங்களை என்னுள்
சிதறி சென்றவள் .......
எந்த நினைவுகளைத் தள்ளி
வைப்பது.......
எல்லாம் உன் நினைவுகளாகவே
இருகிறதே.......?
எப்படி மறப்பது.......?
இந்த பனிபோல் பேசும்
வயதுக்கு வந்த தேவதையை........?