துளித்துளியாய் சில துளிப்பாக்கள்
வெட்கம்
உன் ஓர பார்வையில்
உன் இதழோர புன்னகையில்
உணர்ந்தேன்
வெட்கம் எனும் வார்த்தையின் அர்த்தத்தை..
இதழ்கள்
உன் மனம் சொல்ல மறந்ததை
உன் இதழ்கள் சொல்லி போனதடா
புன்னகையோடு..
ஸ்பரிசம்
உன் தீண்டலுக்காக
காத்துக் கிடக்கிறேன்
ஒரு முறையேனும் தீண்டி செல்
நூறு முறை செத்து பிறப்பேன்..