பாசம்

இரத்தத்தால் இணைந்து
கருவறையால் கவர்ந்து
பத்து மாதம் பார்த்து பார்த்து
உயிரை ஊட்டிவிட்ட
தாயிடம் பாசம் !!!
ஓராயிரம் ஓட்டங்கள் ஓடினாலும்
ஓயாது ஓடி
கண்ணுக்குள் கண் வைத்துப்பார்த்த
தந்தையிடம் பாசம் !!!
குட்டிக் குறும்புகள் செய்து
கட்டியணைக்கும்
அக்காவிடம் பாசம் !!!
தோல்விகளை தகர்த்தெறிய
கவலைகளை கடந்திர்க்க
கஷ்டங்களை கரைசேர்க்க
துன்பங்களை துடைத்தெரிய
வெற்றிகளை வெளிபடுத்த
உயிராய் உருவெடுத்த
நண்பர்களிடம் பாசம் !!!
இஃது பாசம் நிரந்தரமானது ..................................!!