பைத்தியம் நானடி

கொஞ்சம் கொஞ்சம் மாக,
என் நெஞ்சம் நெஞ்சம் சாக,
காதலெனும் கள்ளிமரம்.
என் காதல்மகள் தந்தவரம்.
பச்சோந்தியும் பலவண்ணம் பெறும்.
இவள் ஜோதியும் அதனினம் வரும்.
"வெற்றிக் கொடியாய்" என் இதயம்.
இன்று,
"வெற்றுக் கொடியாய்" துள்ளுதடி..
உன் இருவிழி போன
வழிச்சென்றால், வழியில்
வலி வந்து கொல்லுதடி..
கள்ளிக்கு மகளாய் பிறந்தவளோ??
என்னை,
கள்ளுக்கு மகனாய் மாற்றிவிட்டால்..
காரின் மழையாய் குளிர்ந்தவளோ???
என்னை,
கானல் மழையால் கொன்றுவிட்டால்...
"காதல்கொள்ளும்" நண்பர்களே!
"காதல் கொல்லும்" என
சொல்லிருந்தால்,
முன்பே பார்த்திருப்பேன்
"வைத்தியம்".
சொல்லாமல் போனதனால்
என் சொந்தங்கள்
வைத்த என்பெயரோ
"பைத்தியம்"..