==அநீதியை எதிர்ப்போம்==

இன்று வாழும் போதே
சொர்க்கம்காண அரசியலாம்..
அங்கும் பல பாவிகளின்
போட்டியில் தான் பதவிகளாம்....

இங்கு கொள்ளையடிக்க பல
ஓநாய்கள் கூட்டம் சேர்க்குது..
அதில் பங்கு பெறும் சில
தெருநாய்கள் லஞ்சம் வாங்குது....

அன்று என் பச்சிளங்கள்
பரிதவித்து தீயில் கருகினார்களே..
இன்றும் பாவிகள் தன்னுயிரை
காக்கதினம் அலைகின்றனரே..

சரணம் போடும் கூட்டத்திற்கு
செவிசாய்க்கும் என் அரசே.
மரண ஓலமதில் அலறிய
பலபிஞ்சுகுரல் கேட்க்கலியோ...??

கொலைகார கும்பலுக்கு இன்றும்
நீதியிலே களவாட்டமாம்..
பறிகொடுத்த மக்களுக்கு என்றும்
நிதியிலே கைசேரா தளர்வோட்டமாம்...

கொளுத்தவர்க்கு வாழ்ந்து
முடியும் நாளில் தண்டனையாம்..
இழந்தவர்க்கு தேடி செல்லுமிடம்
பலமறுப்பு என்ற பெயரில் கண்டனமாம்...

பணம் இருப்போருக்கு சட்டத்தில்
ஓட்டை தெரியுமென்றால்..
என்றென்றும் பாவிகள் இங்கு
திருந்தும் நாளும் வருவதில்லையே..??

எழுந்திடு தோழா...
எழுந்திடு..!!
நலம் வாழ நம்மில் ஒற்றுமை
போதுமென்று எழுந்திடு..!!

இன்றே நம் கண்மூடி வேஷமிடும்
கொள்ளையரை விரட்டு..
நன்றே பஞ்சமின்றி நாம் வாழ
உன் மதியை திரட்டு..!!

உன் ஒருவன் இன்பமதில் நூறுபேரின்
துன்பம் அதை மறக்காதே..
நூறுபேரின் இன்பத்திற்காய்
உன் ஒருவன் துன்பத்தையும் மறந்துவிடு...!!!

....கவிபாரதி....

எழுதியவர் : கவிபாரதி (1-Aug-14, 4:18 am)
பார்வை : 50

மேலே