மண்ணில் தவழும் என் மடி மீன்

மண்ணில் தவழும் என் மடி மீன்
விண்ணில் தவழ்ந்த ஒளி வெண் மீன்
கண்ணில் ஒளியாய் கருத்தாய் வந்து பாடும்
பன்னில் பொழியாய் பயின்று ஏழை மடியை
தேடி ஏன் வந்தாயோ ? வயலில் உழவுமில்லை
கோடிப் பணமுமில்லை வயிற்ருக்கு சோறுமில்லை
வாடி வதங்கிய வண்ணக் குலக்கொடியே தாய்ப்பாலைத்
தேடாதே தாயுனக்குத் தமிழால் தாலாட்டுப் பாடுகிறேன்.

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (1-Aug-14, 5:36 am)
பார்வை : 106

மேலே