மண்ணில் தவழும் என் மடி மீன்

அந்தாதி
(அதிசகதி)
மண்ணில் தவழும் என் மடி மீனே செம்மீனே
மானே சிணுங்கி மறுகும் அர்த்தம் கண்டேனே
கண்மணி உன்னை கைகளில் ஏந்திக் கொண்டேனே
கலப்பில் லாத அன்பைப் பருகத் தந்தேனே
(சகதி)
தேனே உனக்கு தந்தேன் அம்மா சீம்பாலே
சீனித் தண்ணீர் எல்லாம் இதற்கு அப்பாலே
தானே ஊறும் அமுதம் இந்த தாய்பாலே
தாய்பால் போலோர் அமுதம் உண்டா? மண்மேலே

(முதல் 4 அடிகள் அடிக்கு 13 எழுத்துக்கள் கொண்ட அதிசகதி சந்தம்
பின் 4 அடிகள் அடிக்கு 12 எழுத்துக்கள் கொண்ட சகதி சந்தம்)

எழுதியவர் : சு.ஐயப்பன் (1-Aug-14, 9:58 am)
பார்வை : 178

மேலே