ஓய்வு கிடையாது
கடலில் பிறந்த நான்..
ஓயாது நடனமாடுகிறேன்..
மேடை ஏறாமலே..!
ஆயிரம் ஆயிரம் பேரின் கால்த்தடத்தை..
அடித்துச் சென்று மறைத்து வைத்திருக்கிறேன்..
காவல் துறையால் இன்றும்கூட..
கண்டுப்பிடிக்க முடியவில்லை "கால்த் தடக்களை"
நான் கரையை கடக்கத்தான் நினைக்கிறேன்..
நினைத்துத்தான் பலரை நனைக்கிறேன்..!
குழந்தைகள் மனதில் நான் அலைகள்..
மக்களின் மனதில் நான் சுனாமி..
என் வரலாற்றில் என்றுமே "ஓய்வு கிடையாது"..!