நட்பென்று
பார்த்தவுடன் ஈர்ப்பில்
துவங்கிய உறவில்லை!!
எதையும் நமக்கு நாமே
நிர்ணயித்து கொண்டதில்லை!!
எங்கும் தனித்து
நின்றதாய் நினைவில்லை!!
சூழ்ந்து நிற்கும் சூழ்நிலைகளின்
அழுத்தம், அதிகம் நிலைத்ததில்லை!!
அருகில் இல்லையென்றாலும் ,
தொலைந்து போனதாய் வருந்தியதில்லை!
ஊடல் நிறைந்த வேளையிலும் உள்ளம்
உன்னை நினைக்க தவறியதில்லை!!
முகம் பார்த்து மனதில் இருப்பவைகளை
ஒருமுறை கூட தவறாய் படித்ததில்லை!!
இருவரில் ஒருவர் மகிழ்ச்சியாய் இருந்தாலும்
தன் மகிழ்ச்சியாய் கொண்டாட தவறியதில்லை!!
உரையாடலில் கேலிகளுக்கும், கிண்டல்களும்
என்றுமே பஞ்சம் இருந்ததில்லை!!
மனம் சோர்ந்து இருக்கும் வேளையெல்லாம்
உன் அழைப்பு வர தவறியதில்லை!!
இவை வேண்டுமென்றோ அவை வேண்டுமென்றோ
எதையுமே உன்னிடம் எதிர்பார்த்ததில்லை!!
வேண்டுமென்றே செய்த தவறாய் இருந்தாலும்
உடனே மன்னிக்க தவறியதில்லை!!
எல்லாவற்றிற்கும் மேலாய் நம் உறவுக்கு
நாமே பெயர் வைத்ததில்லை!!
........
நட்பென்று!!