நட்பு

நண்பர்கள் தின வாழ்த்துக் கவிதை

தந்தன தனக்குதன தாளம்
---நட்பின் ஆழம் ரொம்ப நீளம்
சந்திரன் பூமிக்குள்ள தூரம்
---கூட கம்மிதான் தாண்டலாம் யாரும் !

நொண்டி ஆடலாம் வாடா
---நொங்கு திங்கலாம் வாடா
உண்டிக் கோல்இது போல
---உண்டா ஆயுதம் வேற !

கம்மாக் கரைக்குதான் போவோம்
---கெளுத்தி மீனுந்தான் தாவும்
அம்மாளுக்குத் தெரியாம
---பாஞ்சு குதிப்போம்டா நாம !

திருட்டு மாம்பழம் இனிக்கும்
---மாட்டிகிட்டா மனம் வலிக்கும்
குருட்டுப் பாதையில தப்பு
---செஞ்சா திருத்துறது நட்பு !

காலில் முள்ளுஒன்னு தச்சா- இல்ல
---காயம் ஒன்ன நாம பிச்சா
தோலுரிச்சு வரும் ரத்தம் - போல
---நட்பு வாழ்வுக்கு சித்தம் !

பால ஊட்டுவா அம்மா
---பண்ப ஊட்டுவான் அப்பன்
நூல ஊட்டுவார் அய்யா - மூனும்
---சேர்ந்தா நட்பெனும் கொய்யா !

வேற என்னநான் சொல்ல
---நட்புக்கு எல்ல இல்ல
பாற பதத்துல தேவை
---நமக்கு நட்போட சேவை !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (3-Aug-14, 1:14 pm)
பார்வை : 275

மேலே