ஒன்னும் இல்லப்பா
மனைவி : என்னங்க யார் வந்திருக்கா பாருங்க
கணவன் : யாரு?
மனைவி : உங்களோட நண்பர்
கணவன் : வாடா உள்ளவா எப்புடி இருக்க ?
நண்பர் : நல்லா இருக்கிறேன் இங்க பக்கத்து வீட்டுக்கு வந்தேன் அப்படியே உன்னையும் பாத்துட்டு போகலாமுன்னு வந்தேன்
கணவன் ; வாடா சாப்டுகிட்டே பேசலாம்... அம்மா ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்து வை
மனைவி ; சரிங்க
நண்பர் ; என்னடா சாப்பாடு எடுத்து வைக்க சொன்னா வெறும் இலைய மட்டும் போட்டுட்டு போய்ட்டாங்க 5 நிமிஷமா ஆளையே காணும்
கணவன் ; அது ஒன்னும் இல்லடா நேரம் 8 மணி ஆகுது சீரியல் போட்டிருப்பாங்க இப்ப வந்துடுவாங்க
நண்பர் : என்னடா வெறும் சோறு மட்டும் போட்டது போய்ட்டாங்க
கணவன் ; இருடா அடுத்த இடைவேளை வரும் போது வருவாங்க
நண்பர் : என்னடா அப்போ முழுசா உனக்கு வரணும்னா சிரியல் முடியும் வரை காத்திருக்கணும் போல இருக்கு
கணவன் : பழகிடுச்சிப்ப
நண்பர் : எங்க வீட்ல எல்லாம் இப்படி இல்லப்பா
கணவன் : ஒ உனக்கு சாப்பாடு பரிமாறிட்டு தான் வேற வேலையே பாப்பாங்களா உன் மனைவி
நண்பர் : பின்ன நான் எல்லாம் எவ்வளவு கோபக்காரன்
மனைவி : என்னங்க உங்க நண்பருக்கு தொழைபேசி அழைப்பு வந்துது
கணவன் ; யார் பேசினாங்க?
மனைவி : அவங்க மனைவி தான் அழச்சிருந்தாங்க
கணவன் ; என்னவாம்?
மனைவி ; இப்ப மணி 8:30 அடுத்த சிரியல் 9 மணிக்கு தொடங்கிடுமாம் அதுக்குள்ள வீட்டுக்கு வர சொன்னாங்க இல்லன்னா
கணவன் ; இல்லைனா
மனைவி ; 11;00 மணி சிரியல் முடிஞ்சிதான் சாப்பாடுன்னு சொல்ல சொன்னாங்க ...
கணவன் ; !!!!!!!!!
...
..
...
...
...
நண்பர் : அது ஒன்னும் இல்லப்பா உங்க வீட்ல செத்ததுக்கு அப்புறம் தான் குழி தோண்டுவாங்க வாங்க எங்க வீட்டுல இருக்கும் போதே தோண்டிடுவாங்க அவ்வளவு தான்....advance booking....