பாசமுள்ள என் அப்பா

அப்பா......
அம்மா என்னை
கருவில் சுமந்த நாட்களை விட ..........
உன் தோளில் ஏற்றி வைத்து
நீ என்னை
தெருவில் சுமந்த
நாட்கள் தான் அதிகம் அப்பா ..........

அதிகவிலை கொடுத்து
எனக்காக நீ ..........
வாங்கி போட்ட மெத்தையால்
என்ன பயன் ......
என் இளம் வயதின்
பெரும்பகுதி உறக்கத்திற்கு
மெத்தையாகிப்போனது
உன் மார்பு தானே அப்பா ....

பாசத்தோடு உன் கைகள்
என் தலைகோதியிருக்கிறதே தவிர.........
கோபத்தோடு ஒருபோதும்
உன் விரல் கூட
என் மீது பட்டதில்லை அப்பா ..........

குடிநீர் வராத நாட்களில்
குடிசைக்குள் மிச்சமிருக்கும்
கடைசி ஒருகுடம் தண்ணீரை போல .........
பார்த்து பார்த்து செலவு செய்யும்
உன்னால் மட்டும்
எப்படியப்பா முடிகிறது
நான் நினைத்ததெல்லாம் முடித்து வைக்க..........

என் சின்ன ஆசைகளுக்கு
நீதான் சிகரம் தருகிறாய்
என் கருப்பு வெள்ளை
கனவுகளுக்கு நீதான் வர்ணம் பூசுகிறாய்

எந்த வெளியூர் பயணம்
சென்றாலும்
நீ வீடு திரும்பியதும்
அம்மாவிடம் கேட்கும் முதல் கேள்வி
"புள்ள சாப்டானா " என்பதுதான் .....
என்னைப்பற்றிய
உன்னுடைய அந்த அக்கறைதான்
இப்பொழுதும்
உன்னைப்பற்றிய
என் நினைவுகளுக்கு
சக்கரை போட்டுக்கொண்டிருக்கிறது அப்பா .............

என் தவறுகளை
வன்மையாக கண்டிக்கிற நீ ...........
அடுத்த நொடி வந்து
அரவணைத்து கொள்கிறாயே.........
உன்னுடைய அந்த
மென்மையான பாசம்தான்
இப்பொழுது வரைக்கும்
உன்னிடத்தில் என்னை
உண்மையாய் இருக்க வைத்திருக்கிறது அப்பா....

பண்டிகை நாட்களில்
எனக்கான செலவு
நூற்றுகணக்கில் இருக்க........
உனக்காக நீ
ஒரு குண்டுமணி கூட
வாங்கிகொண்டதில்லை அப்பா .....

என்னை சுமந்த தாயின்
கருவறையை விட ...........
உன் கனவுகளின் அறை இருக்கிறதே
அது ரொம்ப பெருசு அப்பா...

என் வாழ்கை பூமியின்
சூரியன் தாய் என்றால் ...........
நிலவு எனக்கு நீ தான் அப்பா ............
சில தருணங்களில்
சூரிய வெளிச்சத்தைக் காட்டிலும்
நிலவு வெளிச்சமே சுகமாய் இருக்கிறது

சிந்திக்கிறேன் ......!
உனக்காக ஒரு நொடி
சிந்திக்கிறேன் அப்பா........

பொழுது விடிந்ததும்
பொழப்பு தேடி ஓடிய
அந்த கனமான பொழுதுகளை
சிந்திக்கிறேன் ......
எனக்காக சொட்டுசொட்டாய்
நீ சிந்திய
வியர்வைதுளிகள்தான்
இந்த நிமிடம்
என் கண்களில்
கண்ணீராய் பெருக்கெடுக்கிறது ......

வாழும் இந்த பூமியில்
ஏழேழு ஜென்மங்கள்
எனக்கிருந்தாலும்
உன் அன்புக்குள் வாழ்ந்திடும்
இந்த ஜென்மன் ஒன்றே
எனக்கு போதும் அப்பா

மழை கொட்டும் காலங்களில்
உன் மார்போடு முகம்பதித்து
நான் உறங்கிய நாட்களிலும்

நடைபயிலாத நாட்களில்
உன் தோல் மீது
அம்பாரி செய்த தருணங்களிலும்

மீண்டும் ஒருமுறை
வாழ்ந்து பார்க்க
ஆசையாய் இருக்கிறது அப்பா ........

என் கனவுகளின்
வெளிச்சத்துக்காக
என் வாழ்வின் சந்தோசத்துக்காக
தன் சுகதுக்கங்களை
அஸ்த்தமித்துக்கொண்ட
உன் தியாகத்திற்கு முன்னால்
என்னால் உனக்கு
என்ன செய்துவிட முடியும் அப்பா.......

இனி

வயது முதிர்வால் ...........
நீ தடுமாறி நிற்கும்பொழுது
உனக்கு தடியாகவும் ..........

முதுமை என்னும்
முள்ளுக்காட்டில்
நீ நடக்கும் பொழுது
உனக்கு செருப்பாகவும் இருப்பதை தவிர
எனக்கு வேறு வழி இல்லை அப்பா ..........



----உன் பாசமுள்ள மகன் பாக்யா ...................

எழுதியவர் : பாக்யா (4-Aug-14, 1:16 pm)
பார்வை : 81

மேலே