என் உயிரே துளிர்விட்டு வளருதடி
என் உயிரே துளிர்விட்டு வளருதடி ....!!!
என்னவளே உன்னை தழுவும் ...
போதெல்லாம் வாடிக்கிடக்கும் ....
செடி மீண்டும் துளிர்ப்பதுபோல் ....
என் உயிரே துளிர்விட்டு ....
வளருதடி ....!!!
தேவதையே உன் தோள்
என்னை வாழவைக்கும்
ஜிவனடி....நீயோ
சாகாவரம் பெற்ற சிரஞ்ச்சீவியடி ...!!!
திருக்குறள் : 1106
புணர்ச்சிமகிழ்தல்
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 26