இவ்வாறாகவெல்லாம்
![](https://eluthu.com/images/loading.gif)
அதிகாலை அவசரங்கள்
தேவையில்லை !
இலக்குகளின்
நிர்பந்தங்கள்
தேவையில்லை !
விடுமுறைகளுக்கு
கைகட்டத் தேவையில்லை !
விவாதங்களில்
உளறிக்கொட்டத் தேவையில்லை !
நாக்கு பிடுங்கும்
கேள்விகளுக்கு
நாணி நிற்கத்தேவையில்லை !
நினைத்த நேரம்
உறவுகளோடு பேசலாம் !
பகல் என்றாலும்
படுத்து உறங்கலாம் !
சீரியல் பார்த்தபடியே
உண்ணுவது சாத்தியம் !
பக்கத்து வீடுகளோடு
பாசம் வளர்க்கலாம் !
இவ்வாறாகவெல்லாம்
இருந்து
பொறாமைப்படுத்துகிறார்கள்
குடும்பத்தலைவிகள்
குடும்பத்தலைவர்களை !
இவ்வாறாகவெல்லாம்
இல்லாமல்
பொறாமைப்படுத்துகிறார்கள்
குடும்பத்தலைவர்கள்
குடும்பத்தலைவிகளை !