நிலாச்சாரல்....

இரண்டு நிமிடம் ... ஒரு நிமிடம் ...
என எனக்காக இருக்கும் மீதி நிமிடங்களை
எண்ணிக்கொண்டிருக்கிறாள்,
வெகு நேரமாகியும் குறையவில்லை ,
நிமிடங்களும், வலிகளும் !!!! ...

அவளை விட்டு பிரிந்துவிடப்போகிறோம்
என்ற பயத்தினால்,
வேக வேகமாய் அவளைப் பின் தொடர்கிறது,
என்னவளின் நிழல் ..............!!!

கனவிலும் நான் நினைக்கவில்லை,
இவ்வளவு எளிதாக
என் இதயத்தை நீ கொண்டுசெல்வாய் என்று !!!

நீயின்றி எப்படி நான் தனித்திருப்பேன் ,
நாளை நீ வரும் வரை ???

உன் தீண்டல் வேண்டிக் காத்திருக்கின்றன,
என் கவிதைகள்......... ...ஜெய் ♥

இப்படிக்கு ,
' அவளால் உருவான '
ஜெய் (எ) உருவம் ....

எழுதியவர் : Jai (10-Jun-10, 4:22 pm)
சேர்த்தது : கவிதைநிலா Jai
பார்வை : 721

மேலே