ஒரு தலை ஏக்கம்
உன்னை கண்டதும் உயிர்பெற்ற காதல்,
மழைதுளி கண்ட மண்ணின் வாசம் போல் மனம்முழுவதும் உன்னுடன் நேசம் கொண்டது,
விரல் தேயிந்தலும் கால்கள் உன்னையே சுற்றின, குழல் ஓசை உந்தன் குரல் கேட்க்க,
என் மனம் நீண்டு சுவாசித்தன, உன் கூந்தல் வாசம் சுவாசிக்க . . .
நட்சத்திரங்களிடையே ஒளிரும் வெள்ளி போன்ற உன் விழிகளை ஆயிரம் இடர் முன்னின்றலும் என் விழிகள் உன் ஒளியையே நோக்கின . ,
பலம் கொண்ட நெஞ்சம் உன் பவளக் கை பற்றவே பிள்ளை போல் ஏங்கின . ,
இவையாவும் காண ஏங்கிய மனம் . ,
இமயத்தை போன்று பெருமிதம் அடைந்தது ,
உன் செந்தாமரை கன்னங்கள் என்ன தோல் சாயும் தருணம் . ,
தடைகளும் துகள்களாய் தோன்றின பவள விரல்கள் என்னுடன் கைகோர்த்தும் . ,
மழை கண்ட சிறு பிள்ளை போல் விண்ணுக்கும் மண்ணுக்கும் கால்கள் குதித்தன, காதலை உன் செவ்விதழ் ஒளிர என் செவிகள் கேட்டதும் . ,
விண்ணை எட்டிய நிலை கண்ட மனம் , மண்மேல் சாய்ந்தன , பாலைவனங்களிடையே தோன்றும் மழை துளிபோல் . , உன் காதல் கானலாய் காற்றுடன் கரைந்ததும் . . ,
நிலை மாறும் உலகில் , நிஜங்கள் புதைந்தாலும் , உணர்சிகள் எரிந்தாலும் , உன்னிடம் நான் கொண்ட காதல் , பிஞ்சு தோளின்மேல் தீட்டிய பச்சை போல என்றும் மாறாது , அழியாது . . . ;
மண்ணுள் போகும் வரை . , வின்கீழ் இவ்வுயிர் உனக்காக காத்திருக்கும்