சரித்திரம் படைத்திடவா

..."" சரித்திரம் படைத்திட'வா' ""...

வேட்டையாட ஒரு கூட்டம்
முனைப்போடு முழித்திருக்க
நீ வேடிக்கை பார்த்ததுபோது
வேங்கையென வெளியில்வா
சகோதரத்துவம் வேண்டுமென்பதில்
எள்ளளவும் சந்தேகமில்லை
தன்மானம் சீண்டிபார்க்கும்
சாட்டையடிக்கு சாந்தமெனும்
மெளனம் சாத்தியப்படாது
சாதிக்க வேண்டுமென்றால்
சாய்ந்துவிடாதிருக்கவேண்டும்
பிரிந்துவிட்ட நம் காரணங்கள்
ஆராய நாம் துடங்கிவிட்டால்
கூத்தாடிக்கே கொண்டாட்டம்
இங்கு பல்குத்தி மனப்பதாலே
நாற்றம் என்றும் நமக்கே
ஒற்றுமையால் உதிரத்தோடு
உறுதியான உள்ளத்தோடு
இருக்கவே பற்றிக்கொள்
மலையை தகர்த்தெறிந்து
சாதித்தே சரித்திரம் படைக்கும்
காலமொன்றும் வெகுதூரமில்லை

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (6-Aug-14, 10:31 am)
பார்வை : 229

மேலே