===+++ஐ நா விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிக்கலாம்+++===

வணக்கம் தோழமைகளே...
2009 ஆம் ஆண்டு இந்த உலகம் அறிய இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் ஒலிந்துகொண்டு சிங்கள ராணுவம், அப்பாவி பொதுமக்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை பதை பதைக்க படுகொலை செய்த பாதகச்செயல் இன்னும் நம்மை உலுக்கிக்கொண்டு இருக்கிறது.
புலிகள் போர்மரபு மீறாத தமிழ் வீரம் படைத்தவர்கள், யாரையும் முதுகில் குத்தத்தெரியாதவர்கள், அதனால்தான் அவர்கள் சிங்களராணுவத்தை மட்டுமே எதிர்த்துப் போராடினார்கள், சிங்கள பொதுமக்களை அவர்கள் சீன்டிகூட பார்க்க நினைக்கவில்லை. ஆனால் சிங்கள ராணுவம் புலிகளோடு மோதி போர் செய்வதைவிட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் இனத்தையே கருவறுத்துவிட வேண்டும் என்ற குரூர எண்ணத்தோடு அப்பாவி பொதுமக்களை கொன்று ஒழித்தார்கள். இந்த கோழைத்தனமானக் கொடூரச்செயளுக்கு மாபெரும் சாட்சிதான் முல்லிவாய்க்காலில் நடந்த இறுதிப்போரில் ஒரே நாளில் மட்டும் 40.000 அப்பாவிப் பொதுமக்கள் கொன்று ஒழிக்கப்பட்டது.
பெரியோகள் முதல் குழந்தைகள் வரை பாரபட்சமின்று, ஈவு இறக்கமின்றி ராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். பெண்களின் கற்பு ராணுவத்தால் சூறையாடப்பட்டன,. தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும்கூட ராணுவத்தினர் தாக்கினார்கள். பாதுகாப்பு வளையங்கள் என்ற பெயரில் பொதுமக்களை தடுத்து வைத்து அவர்களின்மீது அணுகுண்டுகளை வீசி கொன்றார்கள். இதற்கு சாணல் 4 ரின் ஆவணப்படம் ஆதாராமாக இருக்கிறது.
அதோடில்லாமல் பள்ளிகூடங்கள், மருத்துவமனைகள், ஆலயங்கள், போன்ற இடங்களிலும், மக்கள் பெருமளவு ஒதுங்கி நின்ற இடங்களிலும் தடை செய்யப்பட நச்சுக் குண்டுகளை வீசி இன அழிப்பை அரங்கேற்றினார்கள். வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அரசியல் தலைவர்களையும், பொதுமக்களையும், போராளிகளையும், நிர்வாணமாக்கி நிற்கவைத்து சுட்டுக்கொன்றார்கள். இசைப்பிரிய பாலச்சந்திரன், இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவைகள் யாவும் நீங்கள் மட்டுமல்ல உலகமே அறிந்த உண்மையே...
''புலிகளை அழித்து ஈழப்போரை முடிவிற்கு கொண்டுவரப்பட்டதாக அனைவரும் கூறுகிறார்கள், அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், புலிகளை அழிப்பதென்பது இயலாத காரியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்களேயானால், பொதுமக்களை பெரிய அளவில் கொன்று ஒழித்துத்தான் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது என்ற உண்மையும் நிச்சயம் விளங்காமல் போகாது.'' ஆகையினால்தான் திட்டமிட்ட இன அழிப்பு நடந்தது என்பதை நாம் உறுதி செய்கிறோம்.
இன அழிப்பும், போர் குற்றமும், மனித உரிமை மீறல்களும், தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசும், அரசப்படைகளும் மேற்கொண்டன என்பதை உலக நாடுகளிடிம் எடுத்துக்கூறி. ஐந்து ஆண்டுகளாக பல ஜனநாயகப்போராட்டங்களை முன்னெடுத்து, பலதரப்பட்ட ஆதாரங்களை முன்வைத்து. இன்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விசாரனைவரை வந்து இருக்கிறது தமிழனின் பலம்.
நாம் வேண்டுவதெல்லாம், போர் குற்றம் புரிந்த இலங்கை அரசிற்கு தண்டனையும். தமிழர்களுக்கான நிரந்தர தீர்வும்தான்.
இன்று ஐ நா மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு போர் குற்றம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது, இந்திய அரசு விசாரனைக்குழுவிற்கு விசா வழங்க மறுத்துவிட்டது.
மக்கள் போர்க்குற்ற சாட்சியங்களை இணையதள காணொளி (skpe) மூலமாகவும். நேரிலும் அளித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு முழு ஆதரவை வழங்குவது தமிழர்களான நமது கடமையாகும். அதோடில்லை நீங்களும் உங்கள் சாட்சியங்களை ஐ நா மனித உரிமை விசாரணைக்குழுவிடம் தாராளமாக தயங்காமல் அளிக்கலாம். காணொளி, (video), குரல்பதிவு (ஆடியோ), போன்ற ஆவணங்கள் இருந்தாலும் அனுப்பி வைக்கலாம்.
எழுத்து மூலமாகவும் உங்கள் சாட்சியங்களை அனுப்பலாம், ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழிலேயேகூட தட்டச்சு செய்து தங்கள் சாட்சியங்களை வழங்கலாம்.
நீங்கள் வழங்கும் சாட்சியங்கள் மிக அவசியமானதாகும், அது தமிழர்களின் வாழ்விற்கு விடியல்தரும் வல்லமைகொண்டதாகும், இந்த விடயத்தை தங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சாட்சியமளிக்க முழு உரிமை இருக்கிறது. தாங்களது சாட்சியங்களை, அக்டோபர் 30 க்குள் அனுப்பி வைக்க வேண்டியது அவசியமாகும்.
நன்றிகளுடன்
-----------------நிலாசூரியன்.
குறிப்பு;. முறைப்பாடு செய்வதற்கான மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்ய இயலவில்லை, ஆகையினால் கருத்து இடுகிறவர்களுக்கு அது தனிவிடுகையில் அனுப்பி வைக்கப்படும்.
அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான முகவரி.
OISL
UNOG-OHCHR
8-14 Rue de la Paix
CH-1211 Geneva 10
Switzerland