மாக்கான்

ஊரை சுற்றி சுற்றி வருவானாம்
சட்டிச் சோறு தின்பானாம்
குட்டி தூக்கம் பெருந்தூக்கம்
சாவடியே சன்னிதானமாய் நினைப்பானாம் !

மாக்கான் என்ற குரல் கேட்டால்
துள்ளிக் குதித்து வருவானாம்
சொன்ன வேலையை செய்து பின்
சட்டிச் சோறை கூலியாய் பெருவானாம் !

கட்டு விறகை சுமப்பானாம்
சுற்றம் யாவரும் என்பானாம்
கள்ள கபடம் கிடையாது
பொல்லா எண்ணமும் எழாது?!!

காட்டு வேலையும் செய்வானாம்
காசு என்பதை அறியான் !
உடுத்திட உடையும்
படுத்திட பாயும் கொடுத்தால் போதுமென்பான்!

மாக்கான் என்பதை கேவலமாய்
பார்க்கும் மனிதர்க்கு நடுவினிலே
பல்லை காட்டி சிரிப்பானாம்
ஒற்றுமை சின்னம் அவன்தானே!!

கேட்பார் பேச்சை கேட்காமல்
யாரிடமும் சண்டை அடிக்காமல்
சின்னங் சிறிய குழந்தையை போலே
சொல்வதை கேட்டு நடப்பானாம்...!

யாவரும் இது போல் இருந்துவிட்டால்
யாவர்க்கும் துன்பமென்பதே கிடையாதே
யார் பெரியவரென்ற சண்டையிலே
மண்டைகள் உடைத்து தினம் மரித்தனரே !!

குறிப்பு :- (நான் வடித்த பாப்பா பாடல் இது உங்கள் கருத்திற்காக)

எழுதியவர் : கனகரத்தினம் (6-Aug-14, 11:00 am)
பார்வை : 98

மேலே