நிைனவின்சாரல்

நிைனவின்சாரல்

காரிருள் மேகத்தில்
நல்ல கதிரொளி நீயே!

கானங்களில் பாடும் கான குயிலின் ஸ்வரம் நீயே!

விடிந்தவுடன் நான்
விழிக்கும் விழிகள் நீயே!

இரவினில் என்னை
சுமக்கும் தாய் மடியும் நீயே!

கனவினில் நினைவாக
என்னுள் கலந்தவள் நீயே!

என்னையும் கவிஞனாக்கிய கவிதைநீயே!

என் இசையினில் இருந்து வெளிவரும் ராகமும் நீயே!

வானவில் பிறக்க வழிவகுக்கும்
்வான் மழையும் நீயே!

பெண்ணே....

கனவிலும்,நினைவிலும்காதலிடம் முதன்முறையாய் தோற்கின்றேன்...

கண்களுக்குள்ளே
கண்ணீரோடு,இதயத்தில்
உன் நினைவுகளோடு இரசிக்கின்றேன்....!!!

கண்களின் வெளியே கண்ணீர்த்துளியாய்
உன் நினைவுச்சாரல்.....!!!!

எழுதியவர் : சதீஷ் (6-Aug-14, 11:48 am)
பார்வை : 112

மேலே