வேண்டுவோம் அவனுக்காய்

படர்ந்திடும் பற்றிப்
படர்ந்திடும்
கொடிகளுக்காய்!
கை கொடுத்திடும்
கொழுகொம்பைப் போல
எழுந்தவன் விழுந்திடாமலும்
விழுந்தவன் எழுந்திடவும்
நீட்டிடும் கரம் உடையான்
அவனுக்காய்!
வரம் பல பெற்றிடவே!
கரங்கள் உயர்த்தி நாமும்
வேண்டுவோம் இறையிடத்தில்!!

கரைந்தே அழைத்து நிதம்
உணவைப் பகிர்ந்து உண்ணும்
காக்காக் கூட்டம் போல
அண்டை அகத்துடையோன்
உள்ளம் வருந்தி நிதம்
அழுதல் கண்டு கொண்டால்
உதவிக் கரம் தன்னை
நீட்டியே முன் நின்று
ஏழ்மை போக்கி அவன்
மகிழ்ந்தே வாழ்ந்திடவே
உதவும் மனிதன் காணின்
பணிந்தே இறைவன் வசம்
வேண்டுவோம் அவனுக்காய்!!

எழுதியவர் : ஜவ்ஹர் (7-Aug-14, 8:27 pm)
பார்வை : 210

மேலே