நீ
மனம் விட்டு உன்னிடம்
பேச நினைத்து
மனம்விட்டதால் பேசிக்
கொண்டிருக்கிறேன் தனியே!!
இந்த தனிமையின்
அழுத்தத்தை விட
உன் நினைவின் அழுத்தம்
சூழ்ந்து நிற்கிறது அதிகளவில்!
எத்தனை மகிழ்ச்சி உனதருகில்
அத்தனையும் தொலைந்து
மெளனம் மட்டும் மிதமிஞ்சி
நிற்கிறது எனதருகில்!
காயமென எடுத்து கொள்வதா
நீ தந்த பரிசென மகிழ்வதா!!??
எடுத்து கொள்ள போகும்
எனக்கோ வாழ்க்கை !
தந்து சென்ற உனக்கோ
அது ஒரு கனவு!!
உன் அன்பில்
வீழ்ந்தது நான்!!
என் அன்பில்
வாழ்வது நீ!!
உன்னை தொலைத்திருந்தாலும்
தொலையாமல் இருக்கும்
நினைவுகள் வாழ வைக்குமென
கண்மூடி கடக்கிறேன்
.....
ஒவ்வொரு நாளையும்!!