உள்குத்து அல்ல

அன்பு நண்பர்களே,

நேற்று (7/8/2014) என் நெருங்கிய நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தில் வில்லங்கமான வேலை செய்து தொல்லைகளாகத் தருபவர்கள் சிலர் இருப்பதாகவும் அவர்கள் பல ஆண்டுகளாக மாறாமல் இருப்பதாகவும் சொன்னார்கள். அந்த விஷயத்தை மனதில் வைத்துத் தான் வில்லங்கமானவர்களைப் பற்றி என் கருத்தைச் சில வரிகளில் கூறியிருந்தேன். ஒரு நண்பர் அதைப் படித்தபின் ”யாரையோ மனதில் வைத்து எழுதியது போல் உள்ளது. உள்குத்து இருக்கும் போல் தெரிகிறது” என்று எழுதியிருந்தார். அதைப் படித்தபின் அவருக்கு விளக்கம் கொடுத்துவிட்டு அந்தப் படைப்பை விலக்கிவிட்டேன். நான் உள்குத்து வைத்து எழுத வேண்டிய அவசிய,ம். இல்லை. எழுத்து.காம் வழியாக எனது கருத்தைப் பகிர்ந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் செயல். என் புனைபெயர் மலர்1991 என்றிருப்பதைப் பார்த்த ஒரு இளங்கவிஞர் என்னைப் பெண் என்று நினைத்து நான் வலைத்தளத்தில் இருக்கும் போது என்னை வாடி போடி என்றெல்லாம் எழுதினார். நான அவருக்கு ”எனக்கு 62 வய்து ஆகிறது” என்று தகவல் சொன்னேன். உடனே என்னை “பாட்டி” என்று சொல்லி வேறு சில வார்ததைகளால் கிண்டல் செய்தார். ”நான் ஆண் எனது சுயவிபரத்தைப் பார்க்கவும்” என்று பதில் கொடுத்தேன். அதைப் பார்த்த பின்னும் என்னைக் கேலி செய்து பதில் அனுப்பினார். உடனே அவரை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டேன். இன்னொரு நண்பர் எனது படைப்பு ஒன்றைப் படித்து விட்டு “நன்று D” என்று பதில் அனுப்பினார். அது இன்னும் எழுத்தில் இருக்கும் என்று நினக்கிறேன். வில்லங்கர்களைப் பற்றி நான் எழுதியது எழுத்தில் உள்ள யாரையும் நினத்து அல்ல என்பதைத் தெரிவிக்கவே இதை எழுதிகிறேன். அன்புடன்
இரா. சுவாமிநாதன்

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (8-Aug-14, 11:02 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 114

சிறந்த கட்டுரைகள்

மேலே