திறப்பட்டார் முச்செயல் - ஆசாரக் கோவை 79

துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
இன்ப வகையான் ஒழுகலும் - அன்பிற்
செறப்பட்டார் இல்லம் புகாமையும் மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள. 79 ஆசாரக் கோவை

பொருளுரை:

துன்பம் வந்த காலத்தில் அத்துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு வாழ்வதும்,
இன்பம் வந்த காலத்தில் பிறர்க்கும் இன்பம் செய்யும் வகையால் இன்புற்று
நடப்பதும், அன்பில்லாத மனவேறுபாடு உடையவருடைய வீட்டில்
நுழையாமையும் ஆகிய இம் மூன்றும் நற்குணம் கொண்ட
பெரியோரிடத்தில் மட்டுமே உண்டு.

‘துன்பத்துட்டுன்புற்று வாழ்தல்' என்பதற்குப் பிறர்க்குத் துன்பம் வந்த காலத்து
அதற்காகத் தாமும் துன்புற்று வாழ்தலும் என்றலுமாம். அன்பிற் செறப்பட்டார்
என்பதற்கு அன்பில் அழிவடைந்தவர் என்பதுமாம்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Aug-14, 8:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 89

மேலே