அன்னை தர மறந்த பரிசு அவள்

என் அன்னை தர மறந்த
பரிசு அவள் எனக்கு !

அடங்காத ஆனந்தம் !
அமிர்தம் தராததை அவள்
வார்த்தை தந்தது எனக்கு !

அள்ளித் தந்திருப்பேன்
அரசனாய் நான் இருந்திருந்தால் !
அண்ணா என்று அவள் என்னை அழைத்ததற்கு !

என்று நான் செய்த தவமோ
இன்று கிடைத்துவிட்டால்
தங்கை எனக்கு !

காலம் கடந்து கிடைத்தாலென்ன
கர்வத்தோடு வாழ்வேன் அவள்
என் சகோதரிஎன்று !

கடவுளே உனக்கு என் மீது
மீண்டும் கருணை வந்தால் வரமாகக் கொடு
இன்னும் பல சகோதரிகளை !

எழுதியவர் : முகில் (9-Aug-14, 12:03 am)
பார்வை : 391

மேலே