அவன்

அவன்
==========

கார் விபத்தில் சிக்கிமரித்த
வழியாத்திரைக் காரனின்
குருதியில் புழங்கி
அக்கூட்டத்தில் நிற்கையில்
மரித்தவனுடைய
சட்டைப்பைய்யிலிருந்து
பறந்த அந்த ஐம்பது ரூபாயில் இருந்தன
என்னிரு கண்களும்

நான் இருந்தும்
தாலியறுத்துக் கட்டியவள்
என் குழந்தைகள்
பசி என்று கேட்க பார்க்கப்பிடிக்காதவள்
சரி இன்றைய இரா போஜனம்
இதுகொண்டு ஆகட்டும்

இந்த இராத்திரியில்
அப் போஜன ருசியோடு
உறங்குகின்ற என் குழந்தைகள்
காலி வயிற்றோடு நானும் அவளும்

இறந்தவனுடைய பிரேத பரிசோதனையோ
சவதாகமோ முடிந்திருக்கலாம்
அடையும் இமைகளோடு
ஓர்மித்துப்பார்க்க சிரமிக்கிறேன்
குருதியில் புழங்கிநின்ற
அக்கூட்டத்தில்
ஜீவித்திருப்பவர்களுக்கு வாய்க்கரிசி
தந்து மரித்தவனை

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (9-Aug-14, 5:16 am)
Tanglish : avan
பார்வை : 105

மேலே