நித்ய ஆனந்தம்
அலைபாயும் மனித அவலங்கள்
அக மனதின் மர்ம ஓலங்கள்
அகந்தொட்டுச் சொல்லும் உண்மையில்
எவர் மனதில் இல்லை அசிங்கம்
நரித்தன நாடகங்கள்
நாகரீகத்தின் நர்த்தனங்கள்
நல்லவராய் மேல்ப்பூச்சு
நயவஞ்சக உள்மூச்சு!
பசப்பு வார்த்தை பாசங்கள்
இல்லை உண்மை நேசங்கள்
பயம்!
சமூக பயம் எனும் பாதுகாப்பால்
சுமுக நாடக சுக வாழ்க்கை
ஆம்!
ஆசை கண்ட
பேராசை கொண்ட
இம் மனதிற்கு வேண்டும்
ஓர் நிர்மலமான நித்ய ஆனந்தம்!