உன் நினைவில் உருகும் பேரன்

பசிக்கிறது என்றவனைப் பார்க்கையில்
வந்தது உன் ஞாபகம் !

என்ன நினைத்தான் என்று தெரியவில்லை
என்னைப் பேரா என்றழைத்தபோது !

நான் இழந்த நீ எழுந்து
வந்ததுபோ லிருந்தது எனக்கு !

தாத்தா என்று அழைக்குமுன்
தா என அவன் கை நீண்டது !

என்னை மீறி நான் எடுத்த
பத்து ருபாய் நோட்டில் !

நான் பார்த்தது காந்திக்கு
பதில் உன் புன்சிரிப்பை !

என் மீது கை வைத்து
அவன் வாழ்த்த !

பல ஆண்டுகளுக்குப் பின்
மீண்டும் உன் ஸ்பரிசம் !

கண்ணில் நீர் பெருக கண்டேன் அவன்
கடந்து சென்ற பாதையை !

-உன் நினைவில் உருகும் பேரன்
(த.பிரவீன்குமார்)

எழுதியவர் : முகில் (9-Aug-14, 8:18 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 76

மேலே