யாரேனும் ஏற்பாடு செய்யுங்களேன்

சிட்டுக்கள் தமிழ்பேசிக் கேட்டிட ஆசை
விரியும் மலர்களும் யாழிசை மீட்டிட ஆசை
பேசாத மனிதனை உலகெல்லாம் காண ஆசை

போர்வைக்குள் வானவில் காண ஆசை
வெண்ணிற வானம் காண ஆசை
உலகையே கருப்புவெள்ளையாக காண ஆசை

தூக்கம் இல்லாமல் வாழ ஆசை
வான் முழுக்க பறந்து திரிந்திட ஆசை
விண்ணைக் கடந்து சென்றிட ஆசை
நகக் கணுக்குள் ஒழிந்துகொள்ளவும் ஆசை

அவளோடு காட்டில் வாழ ஆசை
நாளெல்லாம் காதல் செய்ய ஆசை
அவள் பல் இடுக்கில் சிக்கிக் கொள்ள ஆசை
சில நேரம் துழைந்து போகவும் ஆசை

ஆனந்தமாய் மாய்ந்து போக ஆசை
தற்கொலை செய்திடவும் ஒரு நாள் ஆசை
விலங்கிற்க்கு விருந்தாகிட பல நாள் ஆசை
சில சமயம் வாழ்ந்துகொண்டே இருக்கவும் ஆசை

எட்டில் துழைத்த கரிக்கோல் கிடைத்திட ஆசை
காதிற்க்கு மேலொரு வடிகட்டி அணிந்திட ஆசை
கோபங்களை எப்போதும் அடக்காமல் இருக்க ஆசை
மானரோசம் எதுவும் இல்லாமலும் வாழ ஆசை

சோழர்களுடன் கடல் வணிகம் செய்திட ஆசை
கம்பனுக்கும் வள்ளுவனுக்கும் பாடம் புகட்ட ஆசை
தமிழை நானே கண்டெடுத் தவனாகிட ஆசை
முட்டாலாய் யாதுமறியாது நாளெல்லாம் சிரித்துவாழ ஆசை

ஆசைகளுக்கு ஆணையிட ஆசை
ஆசைகளூக்கு அணைகட்டிடவும் ஆசை

-------------------------------------------------------------------

எண்ணங்களை வாசனைகளாகவும்
கவிதைகளை சுவைகளாகவும்
கதைகளை கனவுகளாகவும் பதிய ஆசை.............
யாரேனும் ஏற்பாடு செய்யுங்களேன்

-------------------------------------------------------------------

எழுதியவர் : ந.நா (9-Aug-14, 10:47 am)
பார்வை : 153

மேலே