அம்மாஎன்றஒருஜீவன்
திசை தெரியாத பயணம்்
்்வாழ்வு என்றால்்
வாசனைகளோடு நுழைந்த
வாசமல்லி அவள்...
ஏகாந்தங்களை தீட்டி விட்டு
கன்னத்தில் குழி தெரிய
அழகாய் சிரிப்பாள்..
நம்பிக்கை வெளிச்சம்
்மங்கிப்போகும்நேரம்
்நல்லாள் தலையில்
கொட்டி
நானிருக்கிறேன் நட
என்பாள்...
கண் கண்டு பசி என்று
மனதாரஉணவூட்டிடுவாள்.
்்என் பசி தீர்ந்தாலும்
அவள் கை ஊட்டுதல்
நிறுத்தாது.
நிகழ்ந்துவிட்ட
நிகழாமல்போன
அற்புதங்கள்
யாவிற்கும்
அவளுடனானதொடர்புண்டு
அவளே அற்புதங்களின்
சிகரம்..
வரம் தருகிற தேவதை
அவள்
்
்்கர்வமில்லாமல்
கள்ளமில்லாமல்்
"நான் என்னப்பா
செய்தேன்" என்பாள்்
முயற்சிக்கு மூலதனம்
அவள் தான்!!
உண்மை கோபம்
காட்டிடுவாள்்
ஆனால்
்பொய் கோப
முறுக்குகளுக்கே
குழைந்திடுவாள் லேசு மனதுக்காரி...