உன் நினைவுகள்
என் காதலுக்காக
நான் மட்டும் கண்ணீர் விடுவதா.....
இல்லை என்றால்
பல பேருடைய
கண்ணீரை நிறுத்துவதற்காக
என் காதலை விடுவதா.....
என்று
எனக்குள்
ஒரு போராட்டமே
நடந்தது அன்று....
இறுதியில்
நான் கண்ணீரைத்
தேர்ந்தெடுத்துக் கொண்டேன்
நான் விடும்
கடைசி கண்ணீர்த் துளியிலும் கூட
உன் நினைவுகள்
கலந்திருக்கும் உயிரே.......

