காதல் திருமணம் வாழ்க்கை

உன் விரலுக்குள் என் வாழ்வு
எனது நடைவண்டி நீ

கரிசன களிம்புக்காரன் நீ
தண்டித்தும் கண்டித்தும் எனக்காய்

எனக்காய் உருவானவன் நீ
என் உயிராய் என்றும் நீ

உன் அன்பின் வாசம் அறிந்தபின்
என்னுள் காதல் மலர்ந்தது

ஒரு கணம் போதும்
ஓடிப்போய் மணம் முடிக்க...

நமக்காய் வாழும் பெற்றோரை
மதித்து காத்திருந்தாய்
எறும்பு ஊரக் கல் கரைந்தது

அன்பு நெஞ்சங்களின் வாழ்த்துகளுடன்
இரு மணம் இணைந்தது திருமணத்தில்

திருமணமாய் கனிய
எத்தனை துயரங்கள் தாங்கினாய்...
உன் வலியையும் துயரையும்
நம் காதல் ஆற்றியது

வாழ்வின் நாட்களில் -
முன் அறியாத பேதங்கள்
புரியாத புரிதல்கள்
வெறுப்பாய் மாறி அழுத்த
திக்கித் திணறி நின்றேன்
வாழ்வின் அசாதாரணங்களால்

பொறுமையும் விட்டுக்கொடுத்தலும்
மாசற்ற அன்பும் தான்
வாழ வைக்கும் தெய்வங்கள்.
காதல் மட்டும் அல்ல!!!
புரிந்தது இன்று.

எழுதியவர் : சுதா வரா (10-Aug-14, 7:35 pm)
பார்வை : 134

மேலே