அம்மாவின் வாசம்

வெள்ளிக் கிழமை
பூஜை முடித்து
வியர்வையில் நனைந்த
விபூதிக் கீற்றின்
மெல்லிய வாசம்
அதில் மெல்ல கலந்த
மஞ்சளின் நேசம்
கொண்டை நுனியில்
ஊசலாடிய
மல்லியின் வாசம்
புளிக் கரைத்து
புடவையில் துடைத்த
சமையலின் வாசம்
கைக்கழுவியும் கழுவப் படா
இஞ்சி பூண்டு வாசம்
கட்டியணைத்த அம்மாவிடம்
கலந்துவந்த அந்த வாசம்
இதயம் தொட்ட அந்த நேசம்
இன்றும் மணக்கிறது
நாசி சிலிர்க்கிறது.....
எத்தனை சந்தனம்
ஜவ்வாதும் அவ்வாறு மணக்கவில்லை
என் தாய் மன(ண)த்திற்கு
ஈடில்லை
காற்றில் கலந்து
கவிதையில் நனைந்து
இன்றும் வீசிக் கொண்டு தானிருக்கிறது.....

எழுதியவர் : சித்ரா ராஜ் (11-Aug-14, 8:19 pm)
Tanglish : ammaavin vaasam
பார்வை : 385

மேலே