தாய்க்கு தெரியவில்லை
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு வேலை மட்டும் தான் உண்டு
முப்பொழுதும் உனக்கு அமுது படைத்த
தாய்க்கு தெரியவில்லை நீ ஒரு வேலை
சாதமும் அவளுக்கு தாராய் என்று!
கிழிந்த ஆடை தான் உடுத்தி
பட்டு உடுத்தி உனக்கு ஆழகு பார்த்த
தாய்க்கு தெரியவில்லை தான் காலம் முழுதும்
உடுத்த போகும் ஆடை இது தான் என்று!
கணவனோடு சண்டை போட்டு
மகனுக்கு பரிந்துரைத்த
தாய்க்கு தெரியவில்லை நீ மனைவி
பேச்சை கேட்டு செல்வாய் என்று!
தெரிந்தாலும் தன் கடைமைகளை
மறக்க ஏனோ
தாய்க்கு தெரியவில்லை!
மாறாத அன்பிற்கும் மரிக்காத அன்பிற்கும்
என்றும் தாய்க்கு நிகர் இல்லை
யாரும் இவ்வுலகில்!