அன்பின் பரிசு

அன்பின் பரிசு.

பாப்பா பாப்பா நீ சொல்லு
பாடம் முதலில் “அ” சொல்லு
அம்மாதானே ஆரம்பம்
அவளைப் போற்றி நீ நில்லு.

இருக்கும் காலம் ஈடில்லை.
உனக்குள் ஊக்கம் ஊறில்லை.
எண்ணம் ஏக்கம் ஏறுமுகம்
ஐந்துள் அடக்கம் அன்னைமுகம்.

ஒழுக்கம் ஓதும் நன்பாடம்
விழுப்பம் ஆகும் பொன்போலும்.
ஔவை மொழியே செவ்வைநெறி
பவ்வியம் பழகி அவ்விதமறி.

பிறக்கும் நாளே பரிசாக
பெற்றால் தாயே உனையாக..
பரிசும் தந்தாள் அம்மாவும்
பதித்து முத்தம் அன்பாக.

மருத்துவம் தொடங்கி மணக்கோலம்வரை
கருத்துடன் அம்மா காக்கின்றாள்.
திருத்தும் கல்வியும் தீர்க்கம் தந்து.
பொருத்தும் தொழிலும் வார்க்கின்றாள்.

அம்மா என்றால் அன்பேதான்.
அன்பே தெய்வம் அவளேதான்.
அவளே வாழ்வின் ஆதாரம்.
ஆதாரம் அவளொரு அவதாரம்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (13-Aug-14, 1:36 pm)
Tanglish : anbin parisu
பார்வை : 221

மேலே