துரோகம்

மாணவன் ஒருவன் தன் பள்ளிப் பருவத்தை முடித்து விட்டு கல்லூரிப் பருவத்திற்கு முன்னேறினான். அங்கு கல்லூரி தொண்டங்கிய சிறு நாட்களில், அவனுடன் பயலும் ஒரு பெண்ணின் நடப்பு அவனுக்கு கிடைத்தது. இருவரும் தங்களின் கைபேசி என்னை பரிமாறி கொண்டனர். பின்பு கல்லூரி முடிந்தவுடன் இருவரும் குருந்த்தகவல்கள் மூலம், தினமும் இரவும் பகலும் உரையாடிக் கொண்டிருப்பது வழக்கம். ஒரு நாள் அவனுக்கு அப்பெண் அவன் மேல் காட்டும் அக்கறைகள் அவள் மீது காதல் வய பட வைத்தது. அவளுக்கும் அவன் மீது அன்பு அதிகமாகவே இருந்தது. ஒரு நாள், தக்க தருணம் அமைகையில் அவனும் தன் மனதில் இருக்கும் காதலை அவளிடம் சொல்ல, அவளும் முடிவெடுக்க நேரம் வேண்டும் என்று கூறினால். அவளின் பதிலுக்கு இவனும் காத்து கொண்டிருக்க, அவளின் பதிலோ “விருப்பமில்லை” என்று வந்தது. காரணம் கேட்டதற்கு இவனிடம் இருக்கும் குடிப் பழக்கத்தை அவள் காரணம் சொன்னால். இவனும், தான் செய்த தவறுக்கு கடவுள் கொடுத்த தண்டனை என்பது போல் அதை எடுத்து கொண்டான். இருந்தும் அவளை மறக்க அவனால் முடியவில்லை. ஆதலால் அவளின் கைபேசி என்னை அழைத்தான், அவளும் அழைப்பை ஏற்று கொண்டு பேசினால். தன்னை அவளுக்கு பிடித்திருந்தும் ஏன் அவள் திருமணம் செய்ய மறுத்துவிட்டால் என்று கேட்க்க, அவளோ என்னக்கு உன்னிடம் பேச விருப்பமில்லை மேற்கொண்டு பேசினால் நீ ஏன் மனதை மாற்றி விடுவாய் என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து விட்டால். அடுத்தநாள் அவளை, கல்லூரியில் நேரில் சென்று பேசிய பொது. தன்னை அறியாமல் அவனை நிராகரித்ததற்கு உண்மையான காரணத்தை உளறிவிட்டால். அவள், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவன் கூறியதாக அவளின் தோழியிடம் சொன்ன போது, அவளின் தோழியோ அவன் நம் ஜாதி இல்லை என்றும், மீறி காதலுக்கு சம்மதித்தல் குடும்பத்தில் குழப்பம் வந்துவிடும் என்று குழப்பி விட்டதாக கூறிவிட்டு சென்று விட்டால். அந்த பெண்ணின் தோழியோ இவனுக்கும் தோழி தான். அன்றுதான் அவன் நட்பிலும் துரோகம் உண்டு என்பதை உணர்ந்தான்.

(இது போல் காதலுக்கு அர்த்தம் தெரியாதவர்களால், காதலை இழந்தவர்களுக்கு இது சமர்ப்பணம்)

எழுதியவர் : தமிழரசன் (12-Aug-14, 10:50 am)
Tanglish : throgam
பார்வை : 543

மேலே