வழி தவறிய இதயத்தின் வலி

தன் வாழ்க்கையைத் தேடி அலைந்து, இறுதியில் கறை சேர்ந்த நரி, தன் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்தது என எண்ணம் கொண்டது. ஆனால் அதன் வாழ்க்கையே அங்கு தான் துவங்கியது. பல்கலைக்கழகத்தில் கால் வைத்த நரி, படித்துப் பட்டதாரியாக வேண்டும் என்று இலட்சியம் கொண்டது. சுதந்திரமாக துறு துறுவென சுத்தி கொண்டிருந்த அந்த நரியைத், தந்திரமாக தன் வலையில் விழவைத்தது மான் ஒன்று. பெண்களின் சகவாசம் கொண்டில்லாத நரி முதன் முறையாக ஒரு மானிடம் சிரித்துப் பேசிப் பழகியது.
நரியின் போக்கு சிறிது சிறிதாக மாற்றம் கொண்டது. நரிக்கு அதிகமான பொருப்புணர்சி கூடியது. மேலும் மான் மீது நரிக்கு ஒரு தனி அக்கறையே. முகநூலில் ஆரம்பித்த இவர்களின் நட்பு, தொலைப்பேசியில் காதலாக மாறியது. பேச வேண்டிய நேரங்களில் அமைதியாக இருந்து விட்டால், அமைதியான நேரங்களில் நிம்மதியாக இருக்க முடியாது, ஆக இவர்களின் காதல் போராட்டம் இடைவிடாது தொலைபேசியிலேயே தொடர்ந்தது.
மாதங்கள் உருண்டோடின, நரிக்குத் தூக்கம் வருவதில்லை, காரணம் தூங்க முடிவதில்லை, ஏன்? நரியின் கண்களுக்குள் மான் முகம் தெரிவதால்… நரியின் காதல் முத்தியது, அது மானின் உணர்வுக்குக் குத்தியது. அளவுக்கு மீறிய நரியின் அன்பு, மானுக்கு வெறுப்பையும் எரிச்சலையும் அதிகரித்தது. மான் இவ்வகையான உறவு வேண்டாம், அதிகமான அன்பு இறுதியில் வீட்டுக்குத் தெறிந்தால் வம்பு என ஆயிரம் தடவை கூறியும், நரிக்கு அவையனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான். மான் ஒரு முடிவுக்கு வந்தது. சிறிது காலம் நரியிடம் பேசாதிருந்தால் பிரச்சனையனைத்தும் தீர்ந்து விடும் என ஏமார்ந்த மான் மேலும் இவர்களிடையே வளர்ந்த சிக்கல் இறுதியில் சண்டையில் முடிந்தது.
மனதுக்கு பிடிதவர்களிடம் மனம் விட்டு பேசினால், மரணவலி கூட மரத்து போகும், அதுவே அவர்கள் பேசாமல் சென்றால் அந்த வாழ்வே அவர்களுக்கு மரணித்து போகும். அதன் வேதனை பலருக்கு வேடிக்கையாக அமைந்தாலும், நரிக்கு இது சோதனைதான். முடிவெடுக்க முடியாத ஒரு யுத்தம். தன் முடிவை மாற்றுமாறு
கெஞ்சியது, அழுதும் புலம்பியது, ஆனால் கொஞ்சம் கூட மனிதாவிமானம் இல்லாத மான், ஆற்றில் இரைக்காக காத்திருக்கும் ஒற்றை கால் நாரையாக அதன் முடிவில் பிடிவாதமாக இருந்தது. நரியின் பிடிவாதம் இருதியில் பெரும் வாதமாக அமைந்தது. இனியும் தன் வாழ்க்கையில் நரி தேவையில்லை என்று தீர்மானித்து, காகிதத்தைக் குப்பையில் வீசுவது போல காதலைக் கிழித்து எறிந்தது.
பாவம் அந்த நரி, நேசித்த இதயத்தையும் சுவாசித்த உயிரையும் ஒரு நாளும் மறக்க முடியாது, மறந்தால் அது மரணமே. ஒரு மாதம் நரி அவளை மறந்து வாழ முயற்சித்தது, நடமாடும் பிணமாக இறந்து வாழ்ந்தது. நேசிக்க யாரும் கற்று கொள்வதில்லை ஆனால் நேசித்த பின் நரி அதிகம் கற்றுக்கொன்டது இனி யாரையும் அதிகமாக நேசிக்க கூடாது என்று.
நரிக்கு எவரும் இல்லை என்று எண்ணம் கொண்டு தனிமையை நுகர்ந்து கொண்டிருந்தது. அப்போது சுற்றிருந்த நரியின் நண்பர்கள் தான் அவனுக்கு ஆருதலாக கூடவே இருந்தார்கள். நரி தனியாக இருந்தாலும், அவனுக்கு தணிமை தெரியவில்லை காரணம் பெற்றோர்களின் அன்பும், நண்பர்களின் அரவனைப்பும் தான்.
நாட்கள், வாரங்களாகின, அது சில மாதங்களாகின, பல ஏமாற்றங்களைச் சந்தித்த பின் நரி எதிர்பார்ப்பில்லாமல் வாழ கற்றுக்கொண்டது. நரி வாழ்க்கை யுத்தத்தில் பல பெண்களைச் சந்தித்தது, ஆனால் பழகுவதற்க்குப் பல முறை சிந்தித்தது. அனைத்து பெண்களையும் இன்றுவரை சகோதரிகளாகவே நினைத்து பழகுகிறது. கையளவு இதயம் இருந்தாலும் மலையளவு இருக்கும் மானின் நினைவுகளைத் தினமும் சுமக்கிறது நரி, சுமையாக அல்ல சுகமாக. பல முறை நரியின் நண்பர்கள் ஆதரவுக் கூறி, ஆலோசித்தனர் “ஏன் இன்னும் உன்னால் அவளை மறக்க முடிவதில்லை” என்று..அதற்க்கு அவன் “நேசித்த பின் மறந்தால் அது வெறும் நினைவுகள் மட்டுமே, மறந்த பிறகும் நேசித்தால் அது தான் உன்மையான அன்பு”, என்றது.
நரிக்கு இது தேவைதானா? வீனான கோபத்தில் இழந்தது இவனின் காதல் தானா? இலாபம் இல்லாத கோபம் எதற்க்கு மகனே, அதுவே உன் வாழ்க்கையின் சாபம் கண்ணே. வழி தவறிய இதயதிற்கு இன்னுமும் வலிக்கிறதாம்!!!

எழுதியவர் : கிசன்ராஜ் த/பெ நாகராஜ் (11-Aug-14, 11:42 pm)
சேர்த்தது : கிசன்ராஜ் Nagaraj
பார்வை : 470

மேலே