ஆராய்ச்சி

மேகங்கள் இருளாகும் போது
மழை வரும் என தெரிகிறது
மேகங்கள் வெட்ட வெளிச்சமாகும் போது
வெயில் சுட்டெரிக்கப் போகிறது என தெரிகிறது
மழையும் இல்லை வெயிலும் இல்லை
அமைதியான சூழல் நிலவும் போது
பெரும் புயல் அடிக்கப் போகிறது
புரிந்து கொள்வோம்
ஆழ கடல் கொந்தளிக்கும் போது
கடலில்ஏதோ மாற்றம் வரப் போகிறது
தெரிந்து கொள்வோம், இன்னும்
இயற்கையை நுட்பமாகஅறிய
ஆராய்ச்சிகள் செய்து கொண்டே
இடை விடாது போராடுகின்றான் மனிதன்
படைப்பின் மேன்மையை
எடுத்துக் காட்டுகிறான்,
மனிதனுக்கு ஆராய்ச்சி என்பது சிறகு போல
பறக்கின்றான் மேலும் மேலும்
எட்டாத தொலைவில் எல்லாம்
ஆராய்ச்சி ஆராய்ச்சி ஆராய்ச்சி
மனிதன் மாறி விட்டான்

எழுதியவர் : பாத்திமா மலர் (12-Aug-14, 2:43 pm)
Tanglish : aaraaychi
பார்வை : 83

மேலே