பெண் கடவுளானால்

மான் தனித்து போனால்
வேட்டை மிருகம்தான் பாயும் !

ஆனால் இங்கு
பெண் தனித்து போனாலோ
வேட்டை தெரியாத மனித
மிருகம் கூட பாய்கிறது .

அவளால் உலகில் அறிமுகமாகி
சாகும் வரை அவளை
அறியாது சாகும் இனம்
ஆண் மட்டுமே !

மகள் ,தங்கை,மனைவி,அம்மா,
இத்தனை பெயர் இருந்தும் அவள்
ஆணின் முன் இரண்டாம் தர குடிதான் !

கடவுள் படைக்கும் தொழிலை
பெண்ணுக்கு தந்ததால்
பெண் கடவுளானால்
அவள் பெற்ற ஆணோ சாத்தானான்

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (12-Aug-14, 7:44 pm)
சேர்த்தது : krishnamoorthys
Tanglish : pen kadavulaanaal
பார்வை : 260

மேலே