ஒரு வண்ணத் தொடர்

அழகில் விரிந்திருக்கும்
நீல வானம்
அடிவானத்தில் எழுதிய
இளம் சிவப்புச் சித்திரம்
மௌனக் கவிதை சொல்லும்
மெல்லிய காற்று
கொல்லென்று பூத்து மடல் அவிழும்
வண்ண மலர்கள்
கிளை அகன்று சிறகு விரிக்கும்
பறவைகளின் காலை இசை
மெல்ல எழுந்து ஆதவன் கதிர் விரிக்கும்
விடிகாலைப் பொழுது
விளம்பர இடைவேளை இல்லாத
ஓர் அன்றாட வண்ணத் தொடர் !
~~~கல்பனா பாரதி~~~