நானாக நானில்லை

நித்தமும் பிறக்கிறேன் !!
நித்தமும் இறக்கிறேன் !!

பத்து தலை ஆணவமும்..,
கெத்து அனைத்தும் சேர்ந்து தலை விரித்தோடும்
மொத்தும் உன் பசும்பொன் அன்பினால் !!

பித்தனைப் போல உளறல்கள் !!
சித்தனைப் போல தத்துவங்கள் !!

சத்தமில்லாமல் உடல்புகுந்து..,
ரெத்தமெல்லாம் கணம் கரைந்து - என்
மொத்தமெல்லாம் நீயானாய் !!

சொத்து என்பதே நீதானே - நீ இன்றி
சத்து நீங்கிய தேனானேன் - என்றும்
வெத்து இனி என நானானேன் !!!

எழுதியவர் : முரா கணபதி (13-Aug-14, 8:02 pm)
பார்வை : 262

மேலே