என்னோடு நீ-1
எத்தனைமுறை தள்ளிவிட்டாலும்
முகத்தின் முன்னால்வந்து
முறைத்து பார்க்கும்
கூந்தல் நீ...!
இமைகள் மெல்லதழுவிட
விழிகளை தனித்து
தேடி வரும்
கனவு நீ...!
தெளிவாய் எண்ணம் இருந்தும்
பேச்சை உலர வைக்கும்
தடுமாற்றம் நீ....!
முக பேச்சுக்கு ஆட்டம் போடும்
தோடுகள் நீ...!
விட்டு விலகி சென்றாலும்
உள்ளே புகுந்து நிற்கும்
சுவாசம் நீ...!
மனதின் கரிப்பை எல்லாம்
மறைத்து நிற்கும்
சிரிப்பு நீ...!
பின்னால் ஒழித்து வைத்து
சூடினாலும் மணம் வீசும்
மலர்கள் நீ...!
பெண்ணுள் விழுந்து மனதை
மோதிமுளைத்து உயிரில்
வளர்ந்து நிற்கும் அழியா
நினைவுகள் நீ...!
கை அசைவுகளுக்கு
தாளம் கொடுக்கும்
வளையல் நீ...!
என்றும் பற்ற நினைக்கும்
கைகளில் காய்த்த
காய்கள் நீ...!
மேனியோடு உரசிக்கொள்ள
ஒட்டிக் கொண்ட
மஞ்சள் நீ...!
கைகள் எதையோ எழுதிட
ஊறி விடும்
ஈரம் நீ...!
என்றும் உடனே பயணம்
செய்யும் கருநிற
நிழல் நீ...!
விட்டு வெளியே சென்றாலும்
என்மீதே வீசிக்கிடக்கும் வியர்வை
வாசம் நீ...!
வெட்டி வெட்டி விட்டாலும்
பிடிவாதத்தோடு அடம்பிடித்து
வளர்ந்து வளர்ந்துவரும்
நகம் நீ...!
காலம் முழுவதும்
பாதையில் கூடவேவரும்
கொலுசு நீ...!
குளிர்காலம் தோன்றிடும் இதமான
வெப்பம் நீ...!
மனதோடு புதைந்து போன
காயங்களின் கண்ணீரை எல்லாம்
தாங்கமுடியாமல் வீழ்ந்துபோன
தலையணை நீ...!
எனக்காகவே பிறந்து
இவளை சூடிய
தலைவனும் நீ...!!!