நாளைக்கும் இந்த மரம்

நாளைக்கும்
இந்த மரம்
காற்றோடு கதைபேசும் !

நாளைக்கும்
இந்த மரம்
யாருக்கோ நிழல்தரும் !

நாளைக்கும்
இந்த மரம்
பிராணவாயுவைப்
பிரசவிக்கும் !

நாளைக்கும்
இந்த மரம்
மழையில்
தலைகுளிக்கும் !

நாளைக்கும்
இந்தமரம்
அணில்களின்
விளையாட்டுத் திடலாகும் !

நாளைக்கும்
இந்த மரம்
பறவைகளின்
கூடாரமாகும் !

நாளைக்கும்
இந்த மரம்
சிறுவர்களுக்கு
ஊஞ்சலாகும் !

நாளைக்கும்
இந்த மரம்
பூமியை
பூக்களால் ஆசிர்வதிக்கும் !

நாளைக்கும்
இந்த மரம்
இங்கேயே இருந்தால் ............

=====================

குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (13-Aug-14, 9:06 pm)
பார்வை : 99

மேலே