என் தேசம்என் மக்கள்

எங்கோ கேட்கும்
ஜன கண மன...
எழுந்து நிற்கும்
முதியவர்,
துணைக்கால் தேடி...

கொடி விற்பனை,
வருடத்திற்க்கிருமுறை
நெஞ்சில் குத்தும்
தேசியப்பற்று...

சத்தத்தில் கரையும்
காலை வணக்கம்
வரிசையில் செல்லும்
கலாமின் கனவு...

படிக்கட்டு பயணம்
கானா பாடல்
எல்லை தாண்டிய உரசல்
கல்லூரி கனவு...

கட்டிட விவசாயம்
அழிவின்
அறுவடை...

சூரிய வெப்பம்
கையைச்சுடா
வெளிச்சம்...

ஒட்டிய வயிறு,
வானம் பார்க்கும்
விவசாயிக்கு
இறைவன் இட்ட
பட்டை நாமம்...

விலை பேசப்பட்ட
அறிவு வரிசையில்
நிற்கிறது
டாலர் அறுவடைக்கு...

என்று காண்போம்
நம் தேசத்தின் கனவு...

எழுதியவர் : சலீம் கான் (சகா) (13-Aug-14, 9:13 pm)
பார்வை : 153

மேலே