உழவு

சிறிய வயிற்றுள் தீயேனப் பசியை வைத்தான்
ஆதி மனிதனின் முதல் தொழில் தொடங்கிற்று

தொழிலில் பழையன அதுதான் உழவு
உழவுக்குப் பிறகே மற்றவை யாவும்

அடுக்கழகு பிணையா உழவின் மாட்சி
ஆயிரம் பாவலர் பாடினார் அன்றோ

ஏற்றம் இறைத்து ஏறாவிடில்
சோறு தான் இலையில் ஏறிவிடுமோ

நாற்றம் மிகுந்தக் கழனிக் காற்று
கந்தம் தருமோ அந்த வாசனை

புரட்சியென்றால் நாசம் அழிவு
பசுமைப் புரட்சியோ உணவின் செழிப்பு

பசியின் பிணியை களைவது உன்களம்
உன்னைப் போற்றி பணிவது என் கடன்

நீ இல்லையேல் நாங்கள் இல்லை
வேளாளன் இல்லையேல் நீயும் இல்லை

எழுதியவர் : ரமணி (13-Aug-14, 10:56 pm)
சேர்த்தது : ரமணி
Tanglish : uzhavu
பார்வை : 539

மேலே