உந்தன் விழியை செதுக்க வேண்டும்பா - இராஜ்குமார்

உலகம் சுற்றும் - காற்றில்
மிதந்து வந்து
உயிரினம் எல்லாம்
தொட்டு தொட்டு
இதய சுவாசத்தை
பறிக்க வேண்டும்பா ..!!
நொடியில் மறையும் - பனித்துளியில்
மூழ்கி நின்று
நிரந்தரமாய் நிம்மதி
தேடி தேடி
மறையும் மாயத்தை
அறிய வேண்டும்பா ..!!
பறவை பறக்கும் - பாதையில்
பாய் விரித்து
உறையில்லா தலையணையோடு
உறங்கி உறங்கி
உனது பெயரை
உளற வேண்டும்பா ..!!
தலையை கோதும் - விரலில்
தூரிகை கோர்த்து
வண்ணம் எல்லாம்
குழைத்து குழைத்து
பதுமை உன்னை
வரைய வேண்டும்பா ..!!
விளக்கில் ஒளிரும் - சுடரில்
விண்மீன் அடைத்து
கனவை எல்லாம்
அடுக்கி அடுக்கி
உந்தன் விழியை
செதுக்க வேண்டும்பா .!!
--இராஜ்குமார்